வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : செவ்வாய், 27 ஜூலை 2021 (08:01 IST)

சென்னையில் நள்ளிரவில் கனமழை: சாலைகளில் மழைநீர்!

தென்மேற்கு பருவக்காற்று மற்றும் வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில் சென்னை உள்பட பல பகுதிகளில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம் 
 
அந்த வகையில் நேற்று இரவு முதல் சென்னையில் பரவலாக நல்ல மழை பெய்ததை அடுத்து நகர் முழுவதும் குளிர்ச்சியாக காணப்படுகிறது. சென்னையின் முக்கிய பகுதிகளான தேனாம்பேட்டை அண்ணா சாலை எழும்பூர் சைதாப்பேட்டை பிராட்வே டி நகர் உள்ளிட்ட பகுதிகளில் நேற்று நல்ல மழை பெய்ததாக தகவல்கள் வெளிவந்துள்ளன. மேலும் ராயப்பேட்டை திருவல்லிக்கேணி மயிலாப்பூர் மாதவரம் கொடுங்கையூர் வியாசர்பாடி பெரம்பூர் மற்றும் புழல் ஆகிய பகுதிகளிலும் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக கனமழை பெய்து உள்ளது என்றும் இதன் காரணமாக சாலைகளில் மழைநீர் தேங்கி உள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன
 
சென்னையை பொருத்தவரை அடுத்த இரண்டு நாட்களுக்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் நகரின் சில இடங்களில் லேசானது முதல் கனமழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது மேலும் இன்று முதல் நான்கு நாட்களுக்கு கோவை நீலகிரி உள்ளிட்ட மாவட்டங்களிலும் கன மழை பெய்யும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது