1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : திங்கள், 8 ஜனவரி 2024 (07:20 IST)

செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர்வரத்து அதிகரிப்பு.. உபரிநீர் திறக்க வாய்ப்பு..!

சென்னை உள்பட தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வரும் நிலையில் சென்னை அருகே உள்ள செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர் வரத்து அதிகரிப்பதாக தகவல் வெளியாகி உள்ளது 
 
செம்பரம்பாக்கம் ஏரியில் உள்ள நீரின் மட்டம் அதிகரித்து வருவதால் உபரி நீர் திறக்க வாய்ப்பு இருக்கிறது என்றும் மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
 
செம்பரம்பாக்கம் ஏரிக்கு நேற்று 36 கனஅடியாக இருந்த நீர்வரத்து இன்று 497 கனஅடியாக அதிகரித்துள்ளது. 3645 மில்லியன் கனஅடி கொள்ளளவு கொண்ட செம்பரம்பாக்கம் ஏரியில், தற்போது நீர் இருப்பு 3132 மில்லியன் கனஅடியாக உள்ளது.
 
ஏரியில் இருந்து குடிநீருக்காக 108 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வருவதாகவும், ஏரியில் இருந்து வினாடிக்கு 25 கனஅடி உபரிநீர் திறக்கப்பட்டு வருவதாகவும், 24 அடி உயரம் கொண்ட செம்பரம்பாக்கம் ஏரியில் 22.05 அடி உயரத்திற்கு தண்ணீர் நிரம்பியுள்ளது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
 
மேலும் தொடர்ந்து செம்பரம்பாக்கம் ஏரியை கண்காணித்து வரும் நிலையில் நீர்வரத்து அதிகரித்தால் உபரிநீர் திறப்பு அதிகரிக்கப்படும் என தகவல் வெளியாகி உள்ளது 
 
Edited by Siva