வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: வியாழன், 14 டிசம்பர் 2023 (18:31 IST)

வரும் 16, 17 ஆம் தேதிகளில் கனமழைக்கு வாய்ப்பு- வானிலை ஆய்வு மையம்

rain red umbrella
இன்று மற்றும் நாளை தமிழகத்தின் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
 

தமிழகத்தில் வரும் 16, 17 ஆம் தேதிகளில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று தகவல் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து,  சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளதாவது:

கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி, ராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை ஆகிய  மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது.

மேலும், இன்று மற்றும் நாளை ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்யும் எனவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.