செவ்வாய், 14 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: சனி, 8 ஏப்ரல் 2023 (18:12 IST)

அண்ணாமலை கேட்டுக்கொண்டதால் நிலக்கரி எடுக்கும் திட்டம் ரத்து: மத்திய அமைச்சர் தகவல்..!

காவிரியை டெல்டா பகுதியில் நிலக்கரி சுரங்கம் எடுக்கும் திட்டம் ரத்து செய்யப்பட்டதாக இன்று காலை மத்திய அரசு அறிவித்திருந்த நிலையில் அண்ணாமலை கேட்டுக்கொண்டதால்தான் இந்த திட்டத்தை ரத்து செய்ய பரிந்துரை செய்தேன் என ள மத்திய அமைச்சர் தெரிவித்துள்ளார். 
 
காவேரி டெல்டா பகுதியில் நிலக்கரி சுரங்கம் தோண்டப்படும் என சமீபத்தில் மத்திய அரசு அறிவித்து இருந்தது. இதற்கு தமிழக அரசு கடும் கண்டனம் தெரிவித்த நிலையில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மத்திய நிலக்கரித்துறை அமைச்சரை நேரில் சந்தித்து காவிரி டெல்டா பகுதியில் நிலக்கரி சுரங்கம் எடுக்கும் திட்டத்தை கைவிட வேண்டும் என கோரிக்கை மனு அளித்தார். 
 
இந்த நிலையில் இது குறித்து அமைச்சர் பிரகலாத் ஜோஷி தனது ட்விட்டர் பக்கத்தில் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை என்னை பெங்களூரில் சந்தித்து நிலக்கரி எடுக்கும் திட்டத்தை திட்டத்துக்கான பட்டியலில் இருந்து மூன்று பகுதிகளை நீக்க வேண்டும் என வலியுறுத்தினார்.
 
அவரது கோரிக்கைக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையிலும் தமிழ்நாட்டு மக்களின் நலன்களை கருத்தில் கொண்டும் ஏலப்பட்டியலில் இருந்து அதனை நீக்குமாறு நான் பரிந்துரை செய்தேன் என தெரிவித்துள்ளார். 
 
இந்த நிலையில் தமிழ்நாடு முதலமைச்சர் கொடுத்த அழுத்தம் காரணமாகவே இந்த திட்டம் ரத்து செய்யப்பட்டதாக திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் தெரிவித்து வருகின்றன.
 
Edited by Mahendran