தை முதல் நாள் பொங்கல் திருநாளில் தமிழரின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு அவனியாபுரத்தில் தொடங்கி நடந்து வருகிறது.
தமிழர் திருநாளான பொங்கல் திருவிழாவையொட்டி தமிழர்களின் மரபான விளையாட்டான ஜல்லிக்கட்டு தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் நடைபெறுவது வழக்கம். அப்படியாக இன்று மதுரை அருகே அவனியாபுரத்தில் உலக புகழ்பெற்ற ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கியுள்ளது.
இந்த போட்டியில் 1,100 காளைகளும், 900 மாடுபிடி வீரர்களும் கலந்து கொள்கின்றனர். இதில் வெற்றி பெறும் சிறந்த காளைக்கு ஒரு டிராக்டரும், சிறந்த மாடுபிடி வீரருக்கு ஒரு நிசான் காரும் பரிசாக வழங்கப்பட உள்ளது.
இந்த போட்டிகளை காண பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான மக்கள் வருகை தருவதால் அவனியாபுரத்தில் 1500 போலீஸார் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.
Edit by Prasanth.K