நீட் விலக்கு: தமிழக அரசிடம் விளக்கம் கேட்டு மத்திய அரசு கடிதம்
நீட் விலக்கு குறித்து தமிழக அரசிடம் மத்திய அரசு விளக்கம் கேட்டு கடிதம் எழுதியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன
தமிழக சட்ட சபையில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் நீட் விலக்கு மசோதா நிறைவேற்றப்பட்ட நிலையில் இந்த மசோதா குறித்து மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் தமிழக அரசுக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்னர் விளக்கம் கேட்டிருந்தது.
தமிழக மருத்துவதுறை மத்திய அரசுக்கு ஏற்கனவே விளக்கம் அளித்து இருந்த நிலையில் தற்போது மீண்டும் மத்திய சுகாதார அமைச்சகத்தின் மூலம் தமிழக மருத்துவ துறைக்கு நீட் விலக்கு மசோதா குறித்த விளக்கம் கேட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன
இந்த நிலையில் தமிழக சட்ட வல்லுநர்களுடன் கலந்து ஆலோசித்து இன்னும் ஒரு சில நாட்களில் தமிழக அரசு மீண்டும் விளக்கம் அளிக்கும் என்று மருத்துவத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் அவர்கள் தெரிவித்துள்ளார்.
Edited by Siva