திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: செவ்வாய், 22 அக்டோபர் 2019 (19:09 IST)

சீன பட்டாசை வாங்குனா அவ்வளவுதான்! – மத்திய அரசு எச்சரிக்கை

தீபாவளி நெருங்குவதையொட்டி பட்டாசு விற்பனை சூடிபிடித்திருக்கும் சமயத்தில் மத்திய அரசு சூட்டோடு சூடாக ஒரு எச்சரிக்கையையும் விடுத்துள்ளது.

எதிர்வரும் அக்டோபர் மாதம் 27ம் தேதி இந்தியா முழுவதும் தீபாவளி கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. இந்நிலையில் இந்தியா முழுவதும் பட்டாசு விற்பனை களைக்கட்ட தொடங்கியுள்ளது. தீபாவளிக்கு விற்கப்படும் பட்டாசுகளில் முறையற்ற வகையில் சீன தயாரிப்பு பட்டாசுகளும் விற்கப்படுவதாய் புகார்கள் எழுந்துள்ளது.

சீன பட்டாசுகள் விற்பனைக்கு மத்திய அரசு தடை செய்துள்ள நிலையில் தற்போது எச்சரிக்கை ஒன்றையும் விடுத்துள்ளது. சீன பட்டாசுகளை விற்கவோ, வாங்கவோ கூடாது. சீன பட்டாசுகளை சட்டத்திற்கு புறம்பாய் விற்பதாகவோ, பதுக்கி உள்ளதாகவோ தெரிய வந்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

சீன பட்டாசுகள் ஆபத்தானவை என்பதோடு மட்டுமல்லாமல், சுற்றுசூழலுக்கு அதிக கேடு விளைவிக்கக்கூடியவை என்றும், மக்கள் அதை தவிர்க்குமாறும் மத்திய அரசு வலியிருத்தியுள்ளது.