வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: வெள்ளி, 21 ஆகஸ்ட் 2020 (12:29 IST)

நாட்டில் குப்பையான டாப் 10 நகரங்கள்; தமிழகத்தில் மூன்று! – மத்திய அரசு!

இந்தியாவில் மிகவும் அசுத்தமான டாப் 10 நகரங்கள் என மத்திய அரசு வெளியிட்டுள்ள பட்டியலில் தமிழக நகரங்கள் மூன்று இடம்பெற்றுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நாட்டில் உள்ள சுத்தமான டாப் 10 நகரங்கள் பட்டியலை ஆண்டுதோறும் மத்திய அரசின் ஸ்வச் சுர்வெக்சன் என்ற அமைப்பு வெளியிட்டு வருகிறது. இந்த ஆண்டில் அதில் மிகவும் அசுத்தமான 10 நகரங்கள் என்ற பட்டியலும் வெளியிடப்பட்டுள்ளது.

10 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் வாழும் பெருநகரங்களிலேயே அசுத்தமானவை என வெளியிடப்பட்டுள்ள அந்த பட்டியலில் முதல் பத்து இடங்களில் தமிழக தலைநகரான சென்னை 3ம் இடத்திலும், மதுரை 6ம் இடத்திலும், கோயம்புத்தூர் 8, இடத்திலும் உள்ளது. அசுத்தமான நகரங்கள் பட்டியலில் 10 இடங்களில் 3 இடங்களில் தமிழக நகரங்கள் இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

முதல் இடத்தில் பீகார் தலைநகர் பாட்னாவும், இரண்டாம் இடத்தில் கிழக்கு டெல்லியும் உள்ளது குறிப்பிடத்தக்கது.