இரண்டு குழுவாக பிரிந்து சென்று ஆய்வு! - மழை வெள்ள பாதிப்புகளை பார்வையிடும் மத்திய குழு!
தமிழகத்தில் ஏற்பட்டுள்ள மழை, வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்ய வந்துள்ள மத்திய ஆய்வு குழு இரண்டு குழுவாக பிரிந்து ஆய்வுகளை மேற்கொள்ள உள்ளனர்.
கடந்த சில வாரங்களாக தமிழகத்தில் பெய்து வந்த கனமழையால் பல பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. முக்கியமாக சென்னை மற்றும் கன்னியாக்குமரியில் கனமழை காரணமாக பெரும் சேதங்கள் ஏற்பட்டுள்ளன. இந்நிலையில் தமிழகத்தில் சென்னை மற்றும் கன்னியாக்குமரியில் மத்திய அரசின் ஆய்வு குழு இன்று மற்றும் நாளை வெள்ளம் பாதித்த பகுதிகளில் ஆய்வு மேற்கொள்கிறது.
மத்திய அரசின் குழு இரண்டாக பிரிந்து குமரி மற்றும் சென்னையில் ஆய்வு மேற்கொள்கிறது. இன்று மத்திய உள்துறை இணை செயலாளர் ராஜீவ் சர்மா தலைமையிலான குழு சென்னையில் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை ஆய்வு செய்கிறது.