வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: சனி, 12 மார்ச் 2022 (17:52 IST)

செல்போன் கடை உரிமையாளர் வீட்டில் நகை, பணம் திருட்டு

மதுரையில் செல்போன் கடை உரிமையாளர் வீட்டில் நகை, பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை மாவட்டம் வடக்கு ஆவணி மூல வீதியில்  விமல நாதன் என  குடும்பத்துடன் வசித்து வந்தார். இவர் சில நாட்களுக்கு முன் வெளியூர்  சென்றிருந்தார்.

அப்போது,  அவரது வீட்டின் பூட்டை உடைத்து, உள்ளே இருந்த 45 சவரன் நகைகள் திருடப்பட்டுள்ளது. இதுகுறித்து விமல நாதன் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.