1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: வியாழன், 16 ஆகஸ்ட் 2018 (11:03 IST)

கோவை வாலிபரின் வியக்க வைக்கும் தேசப்பற்று

கோவை வாலிபர் ஒருவர் நாட்டின் 72 வது சுதந்திர தினத்தன்று, தனது மாட்டுக்கு, தேசியக் கொடியின் மூவர்ணப் பெயிண்டை அடித்து தனது தேச பக்தியை வெளிப்படுத்தியுள்ளார்.
நேற்றைய தினம் நாடெங்கும், 72வது சுதந்திர தினம் கொண்டாடப்பட்டது, பல முக்கியத் தலைவர்கள், தேசியக் கொடி ஏற்றி மறைந்த வீரர்களுக்கு மரியாதை செலுத்தினர். நாட்டு மக்கள் பலர் தேசியக் கொடியை தங்களது வீட்டிலும், சட்டைப் பாக்கெட்டிலும் மாட்டி தங்களது தேசப் பற்றை வெளிப்படுத்தினர்.
 
இந்நிலையில் கோவை குனியமுத்தூர் பகுதியை சேர்ந்த இளைஞர் அன்வர் என்பவர், தனது மாட்டிற்கு தேசியக் கொடியின் மூவர்ணப் பெயிண்டை அடித்து தனது தேச பக்தியை வெளிப்படுத்தியுள்ளார். இந்த புகைப்படமானது இணையத்தில் வேகமாக பரவி, அன்வரின் தேசப்பற்றை பலர் பாராட்டி வருகின்றனர்.