சாத்தான்குளம் வழக்கு: 5 போலீசாரை காவலில் எடுக்க சிபிஐ மனு தாக்கல்
சாத்தான்குளம் தந்தை மகன் கொலை வழக்கு சமீபத்தில் சிபிசிஐஇயிடம் இருந்து சிபிஐக்கு மாறிய நிலையில் நேற்று இந்த வழக்கு கொலை வழக்காக மாற்றப்பட்டது. இந்த நிலையில் சாத்தான்குளம் கொலை வழக்கில் கைதான 5 போலீசாரை காவலில் எடுத்து விசாரிக்க சிபிஐ மனுதாக்கல் செய்துள்ளது.
இந்த மனுமீது மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் இன்று விசாரணை தொடங்கியது. சாத்தான்குளம் ஆய்வாளர் ஸ்ரீதர், உதவி ஆய்வாளர்கள் ரகு கணேஷ், பாலகிருஷ்ணன், காவலர்கள் முருகன், முத்துராஜ் ஆகிய 5 பேர்களையும் 5 நாள் காவலில் எடுக்க சிபிஐ மனு தாக்கல் செய்துள்ளது
இந்த நிலையில் சிபிஐ தாக்கல் செய்த மனு மீதான விசாரணைக்காக 5 போலீசாரும் இன்று நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டனர். விசாரணை தொடங்கியதும் 5 போலீசாரை 5 நாள் காவலில் விசாரிக்க சிபிஐ கோரிக்கை விடுத்தது. சிபிஐ காவலில் எடுக்க நீதிமன்றம் அனுமதிக்குமா என்பது இன்னும் சில நிமிடங்களில் தெரிந்து விடும்