கல்லூரி மாணவி சத்யா கொலை வழக்கு: சதீஷை காவலில் எடுக்க போலீசார் மனு!
பரங்கிமலை ரயில் நிலையத்தில் கல்லூரி மாணவி சத்யாவை கொலை செய்த குற்றவாளி சதீஷை காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றத்தில் சிபிசிஐடி போலீசார் அனுமதி கேட்டு மனுதாக்கல் செய்துள்ளனர்.
சென்னையைச் சேர்ந்த கல்லூரி மாணவி சத்யாவை சதீஷ் என்பவர் ஒரு தலையாக காதலித்து வந்த நிலையில் சதீஷின் காதலை சத்யா ஏற்கவில்லை என தெரிகிறது.
இதனை அடுத்து சத்யாவை பரங்கிமலை ரயில் நிலையத்திற்கு வர சொன்ன சதீஷ் அவரை திடீரென ரயிலில் தள்ளிவிட்டு கொலை செய்துள்ளார். இதனை அடுத்து அவர் கைது செய்யப்பட்ட நிலையில் தற்போது அவரை காவலில் எடுத்து விசாரணை செய்ய வேண்டும் என நீதிமன்றத்தில் சிபிசிஐடி காவல்துறையினர் மனு தாக்கல் செய்தனர்.
சிபிசிஐடி மனு தாக்கல் செய்துள்ள இந்த மனு மீதான விசாரணை விரைவில் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Edited by Mahendran