செவ்வாய், 26 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Caston
Last Updated : வெள்ளி, 8 செப்டம்பர் 2017 (12:47 IST)

அனிதாவுக்காக போராடிய திருநங்கைகளுக்கு ஏற்பட்ட நிலைமை?

அனிதாவுக்காக போராடிய திருநங்கைகளுக்கு ஏற்பட்ட நிலைமை?

மாணவி அனிதாவின் மரணத்துக்கு நீதி கேட்டும், நீட் தேர்வுக்கு தடை விதிக்க வேண்டும் எனவும் தமிழகம் முழுவதும் போராட்டங்கள் வெடித்து வருகிறது. இந்த போராட்டங்களில் கலந்துகொண்ட இரண்டு திருநங்கைகள் மீது போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.


 
 
நீட் தேர்வை ரத்து செய்யக் கோரிக்கை வைத்தும், அனிதாவின் மரணத்துக்கு நீதி கேட்டும் தமிழகம் முழுவதும் மாணவர்கள், இளைஞர்கள் என அனைத்து தரப்பு மக்களும் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
 
இந்நிலையில் பொறியியல் படிக்கும் திருநங்கை கிரேஸ் பானு உள்ளிட்ட 12 பேர் சென்னையில் போராட்டம் நடத்தினர். அவர்கள் சென்னை கிண்டியிலுள்ள இந்திய அறிவுசார் சொத்துரிமை அலுவலகத்தை முற்றுகையிட்டுனர். இதனையடுத்து அவர்களை போலிசார் கைது செய்தனர்.
 
2 திருநங்கைகள் மற்றும் 10 மாணவர்களை ஜாமீனில் வெளிவர முடியாத ஐபிசி 143, 353,188, 447 ஆகிய பிரிவின் கீழ் கைது செய்து வழக்கு பதிவு செய்து செங்கல்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியுள்ளனர்.