செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: புதன், 24 மார்ச் 2021 (14:34 IST)

விதிமீறி பிரச்சாரம் - கமல்ஹாசன் மீது வழக்குப்பதிவு !

விதிமீறி பிரச்சாரம் செய்ததாக மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. 

 
தமிழகத்தில் வரும் ஏப்ரல் 6 ஆம் தேதி சட்டமன்றத் தேர்தல் வரவுள்ளது. இதையொட்டி அனைத்துக் கட்சிகளும் தீவிரப் பிரச்சாரம் மேற்கொண்டுவருகின்றனர். அதன் ஒரு கட்டமாக மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசனும் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். 
 
திருச்சி மலைக்கோட்டை சறுக்குப்பாறை பகுதியில் விதிமீறி பிரசாரம் செய்ததாக கமல் மீது போலீஸ் வழக்கு பதிவு செய்துள்ளது. கொரோனா விதிகளை மீறியதாக மநீம தலைவர் கமல்ஹாசன் உள்பட 650 பேர் மீது கோட்டை போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.