1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By J.Durai
Last Modified: கோயம்புத்தூர் , சனி, 29 ஜூன் 2024 (13:16 IST)

ஆபத்தை ஏற்படுத்த இருந்த சரக்கு வாகனம்: அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய வாகன ஓட்டிகள்!

கோவை மாநகரில் கட்டுமானப் பணிக்காக வாகனங்களில் இரும்பு கம்பிகள் கொண்டு செல்லப்படுகிறது.
 
இவ்வாறு இரும்பு கம்பிகளை கொண்டு செல்லும் போது பல்வேறு விதிமுறைகளை பின்பற்ற போக்குவரத்து துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டு உள்ளது. அதாவது கம்பிகளின் முன் மற்றும் பின் பகுதியில் சாக்கு மூலம் கட்டப்பட்டு இருப்பதுடன் சிவப்பு நிற துணி கட்டி இருக்க வேண்டும். ஆனால் இது போன்ற விதிமுறைகளை சரக்கு வாகன ஓட்டிகள் பலரும் கடைபிடிப்பதில்லை. இந்நிலையில் கோவை டவுன்ஹால் பகுதியில் இருந்து சிங்காநல்லூர் நோக்கி சரக்கு வாகனத்தில் இரும்பு கம்பிகளை கொண்டு செல்லப்பட்டது. அந்த வாகனம் கோவை - திருச்சி சாலையில் உள்ள ரேஸ்கோர்ஸ் சாலை சந்திப்பின் அருகே வந்த போது அதில் இருந்து இரும்பு கம்பிகள் முன் பக்கமாக சரிந்தது. உடனடியாக டிரைவர் வாகனத்தை நிறுத்தினார். அந்த நேரத்தில் வாகனத்தில் முன்பக்கம் எந்த வாகனமும் இல்லாததால் அதிர்ஷ்டவசமாக வாகன ஓட்டிகள் உயிர்த்தப்பினர்.
 
அந்த வாகனத்தில் இரும்பு கம்பிகளின் முன் மற்றும் பின் பகுதியில் சாக்கு மூலம் கட்டப்படவில்லை. சிவப்பு நிற துணியும் கட்டப்படவில்லை எனவே இது போன்ற விதிமுறைகளை மீறும் சரக்கு வாகன ஒட்டிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று போக்குவரத்து போலீசாரை பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.