சரத்குமார் முதல்வராக முடியாதா? அப்ப அவரது மாமியாரின் கனவு!?
தமிழ் சினிமாவில் 90 களில் முன்னணி நடிகராக வலம் வந்தவர் சரத்குமார். பல ஹிட் படங்களை கொடுத்த இவர் கடந்த 2007 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 31 ஆம் தேதி அகில் ஐந்திய சமத்துவ மக்கள் கட்சி என்ற பெயரில் புதிய கட்சியைத் தொடங்கினார்.
இந்த நிலையில் சினிமாவின் குணச்சித்திர வேடங்களில் நடித்தபடி அரசியலிலும் பயணித்து வருகிறார் நடிகர் சரத்குமார்.
வரும் நாடாளுமன்ற தேர்தலையொட்டி அவர் எந்தக் கட்சியுடன் கூட்டணி வைக்கப்போகிறார் என்று கேள்வி எழுந்த நிலையில், பாஜகவுடன் கூட்டணி என்று அறிவித்தார்.
இந்த நிலையில், தேர்தல் நெருங்கில் நிலையில் தன் கட்சியை பாஜகவுடன் இன்று இணைத்தார் சரத்குமார்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
நள்ளிரவு 2 மணி இருக்கும்., அந்த நேரத்தில் என் மனைவியை எழுப்பி எனக்கு பாஜகவுடன் இணைய தோன்றுகிறது...என கூறினேன். அதற்கு அவர், நீங்கள் எந்த ஒரு முடிவு எடுத்தாலும் நான் உங்களோடு உறுதுணையாக இருப்பேன் என்று கூறினார் என்று தெரிவித்தார்.
சில நாட்களுக்கு முன்பு தமிழக முதல்வராக வேண்டும் என தன் மாமியார் (ராதிகாவின் தாய் கீதா) ஆசைப்படுவதாக தெரிவித்திருந்தார்.
தற்போது, சரத்குமார் தன் கட்சியை பாஜகவுடன் இணைப்பதாக அவர் அறிவித்து கட்சியை இணைத்த நிலையில், சரத்குமாரின் மாமியாரின் ஆசை நிறைவேறுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
அ.இ.ச.ம.க -வை பாஜகவுடன் இணைப்பதற்கு சரத்குமார் கட்சியைச் சேர்ந்த நிர்வாகிகள் எதிர்ப்பு கூறியது குறிப்பிடத்தக்கது.