தமிழ்நட்டில் ரோடமைன் -பி போன்ற உணவுகளுக்கு தடை!
ரோடமைன் பி போன்ற உணவுகளுக்கு தமிழ்நட்டில் அதிகாரிகள் தடை விதித்துள்ளனர்.
ரோடோமைன் - பி ரசாயனம் கலந்த கோபி மஞ்சூரியன் பஞ்சுமிட்டாய் விற்பனைக்கு நேற்று கர்நாடக அரசு தடை விதித்தது. அதாவது, புற்று நோய், கல்லீரல் தொடர்பான நோய்களுக்கு வித்திடும் ரோடோமைன் -பி ரசாயனம் கலந்த கோபி மஞ்சூரியன், பஞ்சுமிட்டாய் விற்பனைக்கு தடைவித்து கர்நாடக சுகாதரத்துறை உத்தரவிட்டிருந்தது.
இதனைத்தொடர்ந்து, ரோடமைன் பி போன்ற உணவுகளுக்கு தமிழ்நட்டில் அதிகாரிகள் தடை விதித்துள்ளனர்.
இதுகுறித்து, தமிழ்நாடு உணவுப் பாதுகாப்புத்துறை ஆணையர் லால்வேனா கூறியதாவது:
தமிழ் நாட்டில் உள்ள அனைத்து உணவகங்களிலும் மாவட்ட உணவுப் பாதுகாப்புத்துறை அதிகாரிகள் நேரடியாக ஆய்வு செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.
மேலும் உணவுப் பொருட்களில் ரோடமைன் -பி போன்ற செயற்கை நிறமூட்டிகளை கொண்டு உணவுகள் தயாரிக்கப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே, புதுச்சேரியிலும், பிறகு சென்னையிலும் பஞ்சு மிட்டாய்களில் நடத்தப்பட்ட சோதனைக்கு பின் தமிழகம் முழுவதும் பிங்க் நிறத்திலான கலர் பஞ்சு மிட்டாயை விற்க தடை விதிக்கப்பட்டது. உடலுக்கு தீங்கு விளைவிக்கும் பிங்க் பஞ்சு மிட்டாய் விற்கப்படுவது கண்டுபிடிக்கப்பட்டால் சம்பந்தப்பட்டவர்களுக்கு ரூ.2 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும்” என்று உணவுப்பாதுகாப்பு அதிகாரிகள் எச்சரித்தது குறிப்பிடத்தக்கது.