புதன், 27 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: வெள்ளி, 26 ஏப்ரல் 2019 (09:05 IST)

வேட்புமனுத்தாக்கல் இரண்டு நாட்கள் குறைப்பு – வேட்பாளர்கள் அவசரம் !

4 தொகுதிகளுக்கான இடைத்தேர்தலுக்கான வேட்புமனுக்கள் 27 மற்றும் 28 ஆகிய நாட்களில் பெறப்படாது என தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் காலியாக உள்ள திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி, ஒட்டப்பிடாரம் மற்றும் சூலூர் ஆகிய நான்கு தொகுதிகளுக்கும் வரும் மே 19ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த தொகுதிகளுக்கான அதிமுக, திமுக, நாம் தமிழர் மற்றும் அமமுக வேட்பாளர்கள் ஏற்கனவே அறிவிக்கப்பட்டுவிட்டனர்.

வேட்புமனுத்தாக்கல் செய்ய கடைசி நாள் ஏப்ரல் 29 ஆம் தேதி ஆகும். அதன் பின்னர் ஏப்ரல் 30 ஆம் தேதி வேட்புமனுக்கள் பரிசீலனை ஆரம்பமாகிறது.  இதுவரை அறிவிக்கப்பட்ட வேட்பாளர்களில் திமுகவை சேர்ந்த இரண்டு பேர் மட்டுமே இதுவரையில் வேட்புமனுக்களை தாக்கல் செய்துள்ளனர். இந்நிலையில் தேர்தல் ஆணையம் ஒரு அதிரடி முடிவை அறிவித்துள்ளது. அது என்னவென்றால் ஏப்ரல் 26 மற்றும் 27 ஆகிய நாட்களில் வேட்புமனுக்கள் பெறப்படாது.

மாதத்தின் கடைசி சனிக்கிழமை வங்கிகள் விடுமுறை என்பதாலும் அதையடுத்த ஞாயிற்றுக்கிழமையும் விடுமுறை நாள் ஆதலால் அந்த இரண்டு நாட்களும் வேட்புமனுக்கள் பெறப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் வேட்புமனுக்கள் தாக்கல் செய்ய இன்னும் இரண்டு நாட்களே உள்ளன. அதனால் வேட்புமனுக்களை இன்று முதலே தாக்கல் செய்ய மீதமுள்ள வேட்பாளர்கள் அவசரம் காட்டவேண்டிய சூழல் உருவாகியுள்ளது.