வியாழன், 2 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : புதன், 3 ஜனவரி 2018 (19:22 IST)

ஒரே நாளில் எகிறிய கால் டாக்ஸி விலை....

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஓலா, ஊபர் போன்ற டாக்ஸி நிருவனங்களின் டிரைவர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் டாக்ஸி கட்டணம் ஒரே நாளில் இருமடங்கு உயர்ந்துள்ளது.
 
வாடிக்கையாளர்கள் தரும் பணத்தில் பெருமளவு தொகையை கால் டாக்ஸி நிறுவனங்களே எடுத்துக்கொள்வதால் ஓட்டுநர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக கூறி கால் டாக்ஸி ஓட்டுநர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
 
கார்ப்பரேட் நிறுவனங்களின் அரசியலாலும், சுயநலத்தாலும் டிரைவர்கள் கமிஷன் தொகை குறைத்து தரப்படுவதால், சில சமயங்களில் டீசல் செலவை விட குறைவான தொகையே எங்களுக்குக் கிடைக்கிறது எனவும் குறிப்பிட்டுள்ளனர். 
 
தற்போது மத்திய அரசு கொண்டு வரவுள்ள மோட்டார் சட்ட திருத்த மசோதா சாமானியர்களை விட கார்ப்பரேட் முதலாளிகளுக்கு சாதகமாக உள்ளதால் அதனையும் தாங்கள் எதிர்ப்பதாக கால் டாக்ஸி சங்க நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.