Daily Horoscope
✕

ஆர்.கே நகரில் வாக்குப்பதிவு தொடங்கியது

Updated: வியாழன், 21 டிசம்பர் 2017 (08:17 IST)
சென்னை ஆர்.கே.நகர் இடைத்தேர்தலின் வாக்குப்பதிவு சற்று நேரத்திற்கு முன் தொடங்கியது. இதனையடுத்து அனைத்து வாக்குச்சாவடிகளிலும் துணை ராணுவத்தினர்களுடன் போலீஸாரும் பெருமளவில் குவிக்கப்பட்டுள்ளனர்.
இந்த இடைத்தேர்தலில் மொத்தம் 59 வேட்பாளர்கள் போட்டியிட்டுள்ளனர். ஆர்.கே நகர் இடைத்தேர்தலுக்காக 50 இடங்களில் 258 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. 950 துணை ராணுவப் படையினர் மற்றும் 3300 போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் வாக்குப்பதிவின்போது எந்தவித முறைகேடும் நடந்துவிடக்கூடாது என்பதை கணக்கில் கொண்டும், அமைதியாக தேர்தலை நடத்தும் வகையிலும் வாகுப்பதிவை தேர்தல் ஆணைய இணையதளத்தில் நேரடியாக ஒளிபரப்பவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. வாக்குகள் எண்ணப்பட்டு இத்தேர்தலின் முடிவுகள் வரும் ஞாயிற்றுக்கிழமை(டிசம்பர் 24-ந் தேதி) வெளியாக உள்ளது.

எல்லாம் காட்டு

எல்லாரும் எம்.ஜி.ஆர், விஜய் ஆகிவிட முடியாது!.. துரைமுருகனே சொல்லிட்டாரே!..

இனி வரும் காலம் திமுகவுக்கு திக் திக் நிமிடங்கள்தான்!.. தவெக ஐடி விங் பதிவு..

இனிமேல் ரிட்டர்ன் கொடுத்து ஆப்பிள் நிறுவனத்தை ஏமாத்த முடியாது.. ஒவ்வொரு ஸ்டோரிலும் ஸ்கேனர் கருவி...

13 கி.மீ தொலைவை வெறும் 21 நிமிடங்களில் கடந்துவிட்டேன்.. இது பெங்களூரா என ஆச்சரியம்: வைரல் பதிவு..

ஆற்றில் கண்டெடுக்கப்பட்ட 343 வாக்காளர் அடையாள அட்டைகள்.. விசாரணை செய்ய காங்கிரஸ் வலியுறுத்தல்...

அடுத்த கட்டுரையில்
Show comments