வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: வியாழன், 21 டிசம்பர் 2017 (04:22 IST)

நள்ளிரவில் வீடுபுகுந்த காவலர்கள்: ஆர்.கே.நகரில் பரபரப்பு

ஆர்.கே.நகரில் இன்று காலை 8 மணி முதல் வாக்குப்பதிவு நடைபெறவுள்ளதை அடுத்து நேற்று இரவு முழுவதும் காவலர்கள் மற்றும் துணை ராணுவ படையினர் தீவிர கண்காணிப்பில் இருந்தனர்.

நேற்றிரவு உச்சகட்ட பணப்பட்டுவாடா நடைபெறும் வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டதால் சந்தேகம் அடைந்த வீடுகளில் நள்ளிரவில் வீடுபுகுந்து காவலர்கள் சோதனை செய்ய ஆரம்பித்தனர்.

இந்த சோதனைக்கு வீட்டின் உரிமையாளர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இருப்பினும் எதிர்ப்பை மீறி காவலர்கள் சோடனை செய்தனர். இதனால் ஆர்.கே.நகர் பகுதி மக்களின் ஒருசிலர் விடிய விடிய தூங்காமல் இருந்ததாக கூறப்படுகிறது.