வியாழன், 12 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: வெள்ளி, 23 பிப்ரவரி 2024 (17:46 IST)

விஷமத்தனமாகப் பரப்பப்படும் செய்திகளை நம்ப வேண்டாம்: புஸ்ஸி ஆனந்த் அறிக்கை..!

bussy anand
தமிழக வெற்றிக் கழகம் குறித்து விஷமத்தனமாகப் பரப்பப்படும் செய்திகளை நம்ப வேண்டாம் என புஸ்ஸி ஆனந்த் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:
 
நம் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் அவர்கள், வருகிற நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பிறகு தான் கட்சி சார்பாக மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிகள் நடைபெறும் என்பதை, பிப்ரவரி 2ஆம் தேதி வெளியிட்ட தமது முதல் அறிக்கையிலேயே தெளிவுபடுத்தியுள்ளார்.
 
தமிழக வெற்றிக் கழகத்தின்  அதிகாரப்பூர்வச் செயலி வாயிலாக மட்டுமே உறுப்பினர்கள் சேர்க்கை நடைபெறும் என்றும், உறுப்பினர்கள் சேர்க்கைக்காகச் சிறப்பு முகாம்கள் நடைபெறும் என்றும் கடந்த 19ஆம் தேதி நான் வெளியிட்ட அறிக்கையில் தெளிவுபடுத்தியுள்ளேன்.
 
கட்சியின் அதிகாரப்பூர்வமான சமூக வலைத்தளங்களில்  வெளியிடப்படும் அறிவிப்புகள் தவிர்த்து, யூகத்தின் அடிப்படையில் அல்லது விஷமத்தனமாகப் பரப்பப்படும் செய்திகளைக் கழகத் தோழர்களும் பொதுமக்களும் நம்ப வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு புஸ்ஸி ஆனந்த் தெரிவித்துள்ளார்.
 
Edited by Mahendran