1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : வியாழன், 9 டிசம்பர் 2021 (08:11 IST)

பேருந்தை ஓட்டிக்கொண்டிருந்தபோது டிரைவருக்கு திடீர் மாரடைப்பு: 50 பயணிகள் தப்பினர்!

மதுரையில் பேருந்து ஓட்டுனர் ஒருவர் ஓட்டிக் கொண்டிருந்த போது திடீரென மாரடைப்பு ஏற்பட்டதை அடுத்து அந்த பேருந்தில் பயணம் செய்த 50 பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளனர் 
 
மதுரை காளவாசல் பகுதியில் இன்று காலை அரசு பேருந்து ஒன்று 50 பயணிகளுடன் சென்று கொண்டிருந்த நிலையில் அந்த பேருந்தை ஓட்டுனர் ஆறுமுகம் என்பவர் ஓட்டிக் கொண்டிருந்தார்.
 
இந்த நிலையில் திடீரென ஓட்டுனர் ஆறுமுகத்திற்கு மாரடைப்பு ஏற்பட்டது இதனை அடுத்து அவர் சாமர்த்தியமாக பேருந்தை ஓரமாக நிறுத்தினார்
 
பயணிகள் அனைவரும் அவரை மருத்துவமனைக்கு கொண்டு செல்ல முயற்சித்த போது வழியிலேயே அவர் உயிரிழந்து விட்டதாக கூறப்படுகிறது 
 
மாரடைப்பு ஏற்பட்ட போதிலும் சாமர்த்தியமாக பேருந்தை ஓட்டுனர் ஆறுமுகம் நிறுத்தியதால் அந்த பேருந்தில் பயணம் செய்த 50 பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர் என்பது குறிப்பிடத்தக்கது