திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: செவ்வாய், 23 நவம்பர் 2021 (21:11 IST)

சாதி வேறுபாடுகள் இல்லா மயானங்கள்- ரூ.10 லட்சம் பரிசு

தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சி நடந்து வருகிறது. முதல்வராக ஸ்டாலின் பொறுப்பேற்றது முதல் பல்வேறு திட்டங்கள் அறிவித்து வருகிறார்.

இந்நிலையில், முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான தமிழ அரசு இன்று முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில். சாதி வேறுபாடுகள் இல்லாத பயன்பாட்டிலுள்ள மயானங்களுக்கு ரூ. 10 லட்சம் பரிசு என்ற முதல்வரின் சட்டமன்ற அறிவிப்பை செயல்படுத்த ரூ.11.10 கோடி ஒதுக்கி இன்று அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

தமிழக அரசின் இந்த அரசாணயை பலரும்    வரவேற்றுள்ளனர்