Daily Horoscope

நிவர் புயலால் மாற்று ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது: பிஎஸ்என்எல் நிறுவனம் தகவல்

Written By siva
Updated: செவ்வாய், 24 நவம்பர் 2020 (21:55 IST)
நிவர் புயல் வங்க கடலில் உருவாகியுள்ள நிலையில் இந்த புயல் நாளை மாலை தமிழகம் மற்றும் புதுவை இடையே கரையை கடக்க உள்ளதை அடுத்து பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன என்பது தெரிந்ததே 
 
இந்த நிலையில் நாளை புயல் கரையை கடக்கும் போது மின்சாரம் தடைபட்ட வாய்ப்பு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் அதே நேரத்தில் நிவர் புயலால் மின் தடை ஏற்பட்டாலும் தொலைதொடர்பு துறை சேவை பாதிக்காத வகையில் மாற்று ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக பிஎஸ்என்எல் நிறுவனம் தெரிவித்தது
 
ஏற்கனவே கடந்த 2015 ஆம் ஆண்டு கன மழை மற்றும் வெள்ளத்தால் சென்னை மிதந்த நிலையில் அனைத்து தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்களின் சேவைகள் முடங்கியது. ஆனால் பிஎஸ்என்எல் நிறுவனத்தின் சேவை மட்டும் பாதிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் நாளை ஏற்படும் புயலின் காரணமாக மற்ற தொலைத்தொடர்புகள் துறைகள் சேவை பாதிக்கப்பட்டாலும் பிஎஸ்என்எல் நிறுவனத்தின் சேவை தொடரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

எல்லாம் காட்டு

அலார்ட்டா இருக்கணும்!.. தவெகவை பகைத்துக்கொள்ளாத எ.வ.வேலு!.. அப்செட்டில் திமுக தலைமை!..

கண்டபடி திட்டினேன்!.. விஜய் ஒரு கோடி கொடுத்தார்!. கருணாஸ் பேட்டி!..

டாஸ்மாக் பார்களில் உணவுக்கூடம்(Resto Bar).. அமைச்சர் விக்னேஷ் அறிவிப்பு...

பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம்.. ஒரு செங்கலை கூட வைக்க விடமாட்டோம்: ஜெயகுமார்

விஜய் லண்டனுக்கு ஜாலி டூர் போனாரா?!... எடப்பாடி பழனிச்சாமி நக்கல்...

அடுத்த கட்டுரையில்
Show comments