திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: ஞாயிறு, 27 அக்டோபர் 2019 (07:40 IST)

இலவச அழைப்புகளை அள்ளிக்கொடுத்த பி.எஸ்.என்.எல் – வித்தியாசமான தீபாவளி வாழ்த்து !

பி.எஸ்.என்.எல் நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு இன்றும் நாளையும் இலவச வாய்ஸ் அழைப்புகளை கொடுத்துள்ளது.

பி.எஸ்.என்.எல் ‘லேண்ட்லைன்’ மற்றும் ‘பிராட்பேண்ட்’ வாடிக்கையாளர்கள் அன்லிமிடெட் வாய்ஸ் கால்களை இலவசமாக செய்துகொள்ளும் விதமாக அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதன் மூலம் பி.எஸ்.என்.எல் வாடிக்கையாளர்கள் வேறு எந்த ‘லேண்ட்லைன்’ மற்றும் செல்போன் எண்கள் வைத்திருக்கும் தங்களுடைய நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருக்கு வரம்பற்ற அழைப்புகளைச் செய்யலாம். இந்த சலுகை இன்றும் நாளையும் மட்டுமே வழங்கப்படுகிறது.

இதுகுறித்து பிஎஸ்என்எல் தரப்பில்  ‘வாடிக்கையாளர்கள் அவர்களுடைய நண்பர்கள், குடும்பத்தினருக்கு வாழ்த்து தெரிவிக்க விரும்பும் இந்த வேளையில் பிஎஸ்என்எல் ‘லேண்ட்லைன்’ மூலம் சிறந்த அனுபவத்தை அளிக்க விரும்புகிறோம்.’ எனத் தெரிவித்துள்ளனர்.