செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: சனி, 31 அக்டோபர் 2020 (12:49 IST)

கொஞ்சம் வெயிட் பண்ணுங்க.. என் லவ்வர் வந்துடட்டும்! – மாப்பிள்ளைக்கு ஷாக் கொடுத்த மணமகள்!

உதகமண்டலம் அருகே தாலி கட்ட இருந்த கடைசி நேரத்தில் காதலனுக்காக காத்திருப்பதாக மணமகள் திருமணத்தை நிறுத்தியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நீலகிரி மாவட்டம் மட்டகண்டி பகுதியை சேர்ந்தவர் ஆனந்த். இவருக்கும் பிரியதர்ஷினி என்ற பெண்ணுக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது. கொரோனா காரணமாக மணமகன் வீட்டிலேயே திருமணம் நடத்தப்பட்ட நிலையில் தாலி கட்ட ஆனந்த வந்தபோது திடீரென மணமகள் பிரியதர்ஷினி ஒரு மணி நேரம் காத்திருக்குமாறு கூறியுள்ளார்.

இதுகுறித்து ஆனந்த் கேட்டபோது தான் சென்னையில் பணிபுரியும்போது வேறொரு நபரை காதலித்ததாகவும், அவர் தன்னை அழைத்து செல்ல வந்து கொண்டிருப்பதாகவும் கூறியுள்ளார் பிரியதர்ஷினி. இதனால் மணமகன் ஆனந்த அதிர்ச்சியடைந்த நிலையில், உறவினர்கள் பிரியதர்ஷினியிடம் பேச்சு வார்த்தை நடத்தியுள்ளனர். ஆனால் பிரியதர்ஷினி பிடிவாதமாக இருந்ததால் அந்த திருமணம் நிறுத்தப்பட்டது. இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.