1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Caston
Last Modified: வியாழன், 30 ஜூன் 2016 (15:14 IST)

தமிழகத்தில் பிராமணர்களுக்கு பாதுகாப்பு இல்லை: எஸ்.வி.சேகர் பகீர் குற்றச்சாட்டு

தமிழகத்தில் பிராமணர்களுக்கு பாதுகாப்பு இல்லை என பாஜக பிரமுகரும் மாநில திரைப்படத் தணிக்கைக்குழு தலைவருமான எஸ்.வி.சேகர் கூறியுள்ளார்.


 
 
சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் இளம்பெண் சுவாதி கொலை செய்யப்பட்டது தொடர்பாக தனியார் தொலைகாட்சி ஒன்றுக்கு பேட்டியளித்த திரைப்படத் தணிக்கைக்குழு மாநில தலைவர் எஸ்வி.சேகர், தமிழகத்தில் பிராமணர்களுக்கு மட்டும் பாதுகாப்பு இல்லை என கூறினார்.
 
சுவாதி பிராமண குடும்பத்தில் பிறந்ததால் அவரது குடும்பத்தினர் நியாயம் கேட்டு போராட மறுக்கின்றனர். அதனால் சுவாதியின் குடும்பத்திற்கு அரசு இன்னும் இழப்பீடு கூட வழங்கவில்லை.
 
பிராமணர்களுக்கு தமிழகத்தில் பாதுகாப்பு இல்லாததால் எதை பார்த்தாலும் ஒதுங்கி ஒதுங்கி செல்லும் பிராமணர்கள் கடைசியில் அமெரிக்கா செல்லும் நிலை தான் தமிழகத்தில் உள்ளது. முஸ்லிம்கள் மற்றும் கிறிஸ்தவர்களுக்கு அசம்பாவிதம் நேர்ந்தால் கவலை கொள்பவர்கள் சுவாதி பிராமிண் என்பதால் வாய் திறக்க மறுக்கின்றனர்.
 
முஸ்லிம்கள் ஹஜ் பயணம் செல்வதற்கு மானியம் தரும் அரசு, இந்துக்கள் காசி செல்வதற்கு ஏன் மானியம் தருவதில்லை இது சரியான நிலைபாடு இல்லை என்று தெரிவித்துள்ளார்.