சென்னை விமான நிலையத்திற்கு மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல்.. பயணிகள் பரபரப்பு!
சென்னை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல் மின்னஞ்சல் மூலம் வந்துள்ளதாக கூறப்படுவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சற்று முன்னர் சென்னை விமான நிலையத்திற்கு வந்த மின்னஞ்சல் ஒன்றில் சென்னை விமான நிலையத்துக்கு வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இதனை அடுத்து பரபரப்பான விமான நிலைய அதிகாரிகள் உடனடியாக பாதுகாப்பு அதிகாரிகளிடம் தொடர்பு கொண்டு தகவல் கூறினர்
இதனை அடுத்து பாதுகாப்பு அதிகாரிகள் தற்போது தீவிர சோதனையில் ஈடுபட்டு வருவதாகவும் ஆனால் விமான நிலையம் முழுவதும் சோதனை செய்ததில் எந்தவிதமான வெடிகுண்டு இல்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன
இதனை அடுத்து வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபரை தேடும் பணியில் காவல்துறையினர் ஈடுபட்டு இருப்பதாகவும் அவர் அனுப்பிய மின்னஞ்சலில் இருந்து அந்த நபர் யார் என்பதை கண்டுபிடிக்கும் முயற்சியில் சைபர் க்ரைம் போலீசார் ஈடுபட்டு வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன
சென்னை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல் வந்த தகவல் பயணிகள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
Edited by Mahendran