1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Dinesh
Last Modified: ஞாயிறு, 18 செப்டம்பர் 2016 (13:14 IST)

’விவாகரத்து செய்தி’ - டென்சனான பிரபல நடிகர்!

நடிகர் பாபி சிம்ஹாவும் நடிகை ரேஸ்மி மேனனும் விவாகரத்து செய்ய முடிவெடுத்திருப்பதாக செய்திகள் வெளியாகியிருந்தது.


 
இது குறித்து பலரும் பாபி சிம்ஹாவை தொடர்பு கொண்டு விசாரித்தபோது அவர் ரொம்பவே டென்சனாகியுள்ளார்.

இந்நிலையில், இது குறித்து, பாபி சிம்ஹா கூறியதாவது, “எங்களுக்கிடையே எந்த பிரச்சினையும் இல்லை. தேவையில்லாமல் யாரோ இப்படி தவறான செய்திகளை வெளியிடுகிறார்கள். அப்படி கேள்விப்படும் செய்திகளை எங்களை தொடர்பு கொண்டபிறகு வெளியிடலாம். ஆனால் அதற்குள்ளாக நான் நீயென்று போட்டி போட்டு செய்தியை வெளியிட்டு விடுகிறார்கள். இதனால் சம்பந்தப்பட்டவர்களின் மனசு புண்படும் என்று யாருமே யோசிப்பதில்லை” என்றார்.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு தான் இவர்கள் இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.