புதன், 18 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Updated : சனி, 9 செப்டம்பர் 2023 (17:15 IST)

சுங்கச்சாவடிகளில் தேமுதிக சார்பில் முற்றுகை போராட்டம்

dmdk
சுங்க வரி உயர்வை குறைக்க வலியுறுத்தி தமிழகம் முழுவதும் தேமுதிக சார்பில் கண்டன போராட்டம் நடைபெற்றது.

இதுகுறித்து தேமுதிக கட்சி தலைவரும் நடிகருமான விஜயகாந்த் தன் சமூக வலைதள  பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:

‘’சுங்கச்சாவடி வரி வியர்வை கண்டித்தும், வரி உயர்வை திரும்ப பெற வலியுறுத்தியும் தமிழக முழுவதும் உள்ள அனைத்து சுங்கச்சாவடிகளிலும்  தேமுதிக சார்பில் முற்றுகை போராட்டம் , இன்று 09.09.2023 நடைபெற்றது’’ என்று தெரிவித்துள்ளார்.

மேலும், ‘’சுங்க வரி உயர்வை குறைக்க வலியுறுத்தி தமிழகம் முழுவதும் கண்டன போராட்டம் நடைபெற்றது. இதில் கழக பொருளாளர் திருமதி.பிரேமலதா விஜயகாந்த் அவர்கள் இன்று (09.09.2023) காலை 11 மணியளவில் சென்னையில் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள வானகரம் சுங்கச்சாவடியில் முற்றுகைப் போராட்டத்தில் கலந்து கொண்டார்’’ என்று தெரிவித்து, போராட்டத்தில் ஈடுபட்ட தேமுதிக தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகளின் புகைப்படத்தைப் பதிவிட்டுள்ளார்.