வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: சனி, 9 செப்டம்பர் 2023 (11:12 IST)

தமிழக உரிமையை நிலைநாட்ட தவறிய திமுக அரசு: அண்ணாமலை குற்றச்சாட்டு

முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் தமிழகத்தின் உரிமையை நிலைநாட்ட அரசு தவறி விட்டது என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை குற்றம்சாட்டினார். 
 
என் மண், என் மக்கள் பாதயாத்திரையின் ஒரு பகுதியாக, தேனி மாவட்டம், கம்பம் தொகுதியில் அவர் நேற்று நடைப்பயணம் மேற்கொண்டார். தொடர்ந்து தொண்டர்கள் மத்தியில் அண்ணாமலை பேசுகையில், முல்லைப் பெரியாறு, கண்ணகி கோயில் ஆகிய விவகாரங்களில், தமிழகத்தின் உரிமையை திமுக அரசு விட்டுக்கொடுத்து உள்ளது என்று குற்றம் சாட்டினார். 
 
கூட்டணியில் இருப்பதால், தமிழக- கேரள எல்லைகளில் குப்பை கழிவுகளை கொட்டும் கேரள அரசைக் கண்டிக்காமல் தமிழக அரசு உள்ளது என்றும் அவர் குற்றம்சாட்டினார்.
 
 
Edited by Mahendran