1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: ஞாயிறு, 19 ஜூலை 2020 (11:48 IST)

திராணி இருந்தா நேரா மோதுங்க.. இப்படி பண்ணாதீங்க! – போலி ட்வீட்டுக்கு பாஜக கண்டனம்!

பாஜக தமிழக தலைவர் எல்.முருகன் பதிவிட்டது போன்ற போலி ட்வீட் ஒன்று சமூக வலைதளங்களில் பரவி வருவது குறித்து பாஜக கண்டனம் தெரிவித்துள்ளது.

கந்தசஷ்டி கவசம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் வீடியோ வெளியிட்டதற்காக “கறுப்பர் கூட்டம்” யூட்யூப் சேனல் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில் கடவுள் முருகனுக்கு ஆதரவாக இணையத்தில் #வெற்றிவேல்_வீரவேல் என்ற ஹேஷ்டேக் ட்ரெண்டாகி வருகிறது. திரைப்பட நடிகர்கள் பலர் இந்த கறுப்பர் கூட்டத்தை கண்டித்து பதிவுகள் இட்டு வரும் நிலையில் பாஜகவினரும் முருகனுக்கு ஆதரவாக பதிவுகளை இட்டு வருகின்றனர்.

இந்நிலையில் தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் பெயரில் போலி ட்வீட் ஒன்று இணையத்தில் பரவி வருகிறது. அதில் ”காட்டுமிராண்டிகளாக திரிந்த ஆதித்தமிழகர்களை பண்படுத்தியது வைதீக வழிபாட்டு முறைகளே தவிர முருகன் அல்ல” என்று உள்ளது. இந்த ட்வீட் வைரலாகி வரும் நிலையில் இது போலி ட்வீட் என்று விளக்கமளித்துள்ள தமிழக பாஜக “இந்துக்களின் கோபத்தை நேரடியாக எதிர் கொள்ள திராணி இல்லாமல் பொய்ச் செய்தி பரப்பி வரும் கோழைகள்...” என்று கண்டனம் தெரிவித்துள்ளது.