தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கைது.. என்ன காரணம்?
கோவையில் தடையை மீறி ஊர்வலம் செல்ல முயன்ற பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை கைது செய்யப்பட்டதாகவும், அவருடன் வானதி சீனிவாசன் எம்எல்ஏ உள்பட 2000 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
கோவை குண்டு வெடிப்புக்கு காரணமான பாட்ஷா என்பவர் சமீபத்தில் மரணம் அடைந்த நிலையில், அவரது இறுதி ஊர்வலத்துக்கு போலீசார் அனுமதி அளித்ததை கண்டித்து பாஜக சார்பில் கோவையில் கண்டன பேரணி நடைபெற்றது.
இந்த பேரணியில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்ட நிலையில், இந்த பேரணி சிவானந்தா காலனி வழியாக செல்ல திட்டமிடப்பட்டது. இந்த நிலையில், காந்திபுரம் சிக்னலை பேரணி கடக்க முயன்ற போது, தடையை மீறி பேரணி நடத்தியதாக பாஜக தலைவர் அண்ணாமலையை காவல்துறையினர் கைது செய்தனர்.
அதனை தொடர்ந்து, பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் உள்பட சுமார் 2000 பேர் கைது செய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
அண்ணாமலை கைதுக்கு தமிழக பாஜக கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Edited by Mahendran