செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: ஞாயிறு, 6 ஜூன் 2021 (15:30 IST)

புதுவையில் நடப்பது என்ன? என்.ஆர்.காங்கிரஸை நெருக்குகிறதா பாஜக??

என்.ஆர்.காங்கிரஸ் கட்சிக்கு பாஜக எந்த நெருக்கடியும் கொடுக்கவில்லை என்று புதுச்சேரி பாஜக தலைவர் சாமிநாதன் கூறியுள்ளார். 

 
புதுவையில் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டு ஒரு மாதத்திற்கு மேலாகியும் இன்னும் முதலமைச்சர் தவிர வேறு யாரும் பதவி ஏற்காமல் உள்ளனர். என்ஆர் காங்கிரஸ் மற்றும் பாஜக இடையே பதவிகளை பகிர்ந்து கொள்வதில் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக இன்னும் எம்எல்ஏக்கள் மற்றும் அமைச்சர்கள் பதவி ஏற்க உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 
 
துணை முதல்வர், சபாநாயகர் மற்றும் இரண்டு முக்கிய அமைச்சர் பதவி ஆகியவற்றை பாஜக கேட்டுக் கொண்டிருக்கும் நிலையில் துணை முதல்வர் பதவியை பாஜகவுக்கு தர என்.ஆர்.காங்கிரஸ் மறுத்துள்ளது. 
 
இந்த நிலையில் என்.ஆர்.காங்கிரஸ் கட்சிக்கு பாஜக எந்த நெருக்கடியும் கொடுக்கவில்லை என்று புதுச்சேரி பாஜக தலைவர் சாமிநாதன் கூறியுள்ளார். என்.ஆர்.காங்கிரஸ் உடன் சுமுக பேச்சுவார்த்தை நடந்துள்ளதால் அமைச்சரவை பட்டியல் விரைவில் வெளியாகும் என அவர் தெரிவித்துள்ளார்.