டாஸ்மாக் திறப்பு; குடியை கெடுக்கும் திமுக ஹேஷ்டேக் – ட்ரெண்ட் செய்யும் அண்ணாமலை!

ஞாயிறு, 13 ஜூன் 2021 (10:40 IST)
நாளை தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்படும் நிலையில் அதற்கு எதிரான ஹேஷ்டேகுகள் ட்ரெண்ட் செய்யப்பட்டு வருகின்றன.

தமிழகத்தில் கொரோனா பாதிப்புகள் அதிகரித்துள்ள நிலையில் கடந்த சில வாரங்களாக ஊரடங்கு அமலில் இருந்ததால் டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டிருந்தன. இந்நிலையில் தற்போது அளிக்கப்பட்டுள்ள தளர்வுகளில் டாஸ்மாக் கடைகள் திறக்க அனுமதிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் 11 மாவட்டங்களை தவிர பிற மாவட்டங்களில் டாஸ்மாக் கடைகள் திறக்க அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், டாஸ்மாக் திறப்பிற்கு எதிர்ப்பும் எழுந்துள்ளது.

இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள தமிழக பாஜக துணைத் தலைவர் அண்ணாமலை “தவறு என்று தெரிந்தும் கூட டாஸ்மாக்கை திறக்கும் தமிழக அரசே, வீழ போவது அப்பாவி பொது மக்களும், வருமான இழப்பில் வாடி கொண்டிருக்கும் நடுத்தர மக்களும்தான் என்பது உங்களுக்கு புரியாதா?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும் இது தொடர்பாக “குடியை கெடுக்கும் திமுக” என்ற ஹேஷ்டேகை ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.

எல்லாம் காட்டு

நான் தமிழரே இல்லையா? என்னுடைய பெயர் திருமாவளவன் இல்லையா? பொங்கி எழுந்த விசிக தலைவர்...

சிவசேனா போலவே சரத்பவார் கட்சியும் பாஜகவிடம் சரண்டரா? முதல்வரை சந்தித்த முக்கிய பிரபலங்கள்...

லஞ்சம் யாராவது கேட்டா உடனே போன் பண்ணுங்க.. வாட்ஸ் அப் நம்பரை கொடுத்த லஞ்ச ஒழிப்புத்துறை....

பள்ளி வளாகத்தில் 12-ஆம் வகுப்பு மாணவருக்குக் கத்திக்குத்து – சக மாணவர் வெறிச்செயல்!

ஐஆர்சிடிசி -க்கு புதிய இணையதளம்.. 4 முக்கிய வசதிகள்.. இனி பயணிகளுக்கு குஷி தான்...

அடுத்த கட்டுரையில்
Show comments