கொரோனாவுக்கு பலியான பாஜக எம்பி: அதிர்ச்சி தகவல்

கொரோனாவுக்கு பலியான பாஜக எம்பி: அதிர்ச்சி தகவல்
siva| Last Updated: செவ்வாய், 2 மார்ச் 2021 (10:19 IST)
கொரோனாவுக்கு பலியான பாஜக எம்பி: அதிர்ச்சி தகவல்
இந்தியாவில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் கொரோனா வைரஸ் பரவி வருகிறது என்பதும் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு பல விஐபிகள் ஏற்கனவே பலியாகி உள்ளனர் என்பதும் தெரிந்ததே

இந்த நிலையில் தற்போது பாஜகவை சேர்ந்த எம்பி ஒருவர் கடந்த சில நாட்களாக கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று உயிரிழந்தார். மத்திய பிரதேச மாநிலத்தை சேர்ந்த காந்துவா என்ற தொகுதியை சேர்ந்த பாஜக எம்பி நந்தகுமார். இவருக்கு சமீபத்தில் கொரோனா நோய் தொற்று ஏற்பட்டது

இதனை அடுத்து இவர் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்த நிலையில் இன்று அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். பாஜக எம்பி நந்தகுமார் அவர்கள் கொரோனாவுக்கு பலியானதால் பாஜக தொண்டர்கள் அதிர்ச்சியில் உள்ளனர். அவர்கள் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.


இதில் மேலும் படிக்கவும் :