1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: செவ்வாய், 2 மார்ச் 2021 (10:00 IST)

1.11 கோடியை கடந்த பாதிப்பு: இந்திய கொரோனா நிலவரம்!!

இந்தியாவில் கொரோனா பாதிப்புகள் குறைந்து வந்த நிலையில் கடந்த சில நாட்களாக மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 
கொரோனா பாதிப்புகள் காரணமாக இந்தியாவில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது. எனினும் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்புகள் அதிகரித்து வருகின்றன. கடந்த சில நாட்களாக ஒரு நாள் பாதிப்பு 30 ஆயிரத்திற்கும் அதிகமாக இருந்த நிலையில் தற்போது குறைந்து வருகிறது.
 
இந்தியாவில் கொரோனாவால் மேலும் 12,286 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,11,24,527 ஆக உயர்ந்துள்ளது. அதேபோல் கொரோனாவில் இருந்து 12,464 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ள நிலையில் குணமாணவர்களின் எண்ணிக்கை 1,07,98,921-ஆக அரிகரித்துள்ளது. 
 
மேலும், கொரோனாவால் கடந்த 24 மணி நேரத்தில் 91 பேர் உயிரிழந்துள்ளதாகவும் ஆகவே உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,57,248 ஆக அதிகரித்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை கூறியுள்ளது.