திங்கள், 25 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By J.Durai
Last Modified: செவ்வாய், 8 அக்டோபர் 2024 (13:52 IST)

பிஜேபி அரசு ஒருமையில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு ஒரு சார்புடைய அரசாங்கமாக செயல்படுகிறது - காங்கிரஸ் தேசிய செயலாளர் சூரஜ் ஹெக்டே பேச்சு......

திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் திருப்பூர் தெற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சியின் சார்பில் அக்கட்சியின் தெற்கு மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் தென்னரசு தலைமையில் நல்லிணக்க நடைபயணம் இன்று தொடங்கப்பட்டது அதில்
காமராஜபுரம் பகுதியில் தொடங்கிய பேரணியில்
காங்கிரஸ் தேசிய செயலாளர் சூரஜ் ஹெக்டே கலந்துகொண்டு பேரணியை தொடக்கி வைத்தார்.
 
காமராஜர் புறத்திலிருந்து கோவை சாலை, அரசமரம் சாலை சின்ன கடைவீதி, பெரிய கடைவீதி, பூக்கடைக்கார்னர் வழியாக நாதஸ்வர மேளதாளங்கள் முழங்க காங்கிரஸ் கட்சியினர் 500,க்கும் மேற்பட்டோர் தலையில் தொப்பி அணிந்தும் கையில் காங்கிரஸ் கொடி ஏந்தியும்.பாஜக மோடி அரசிற்கு எதிராக கோஷமிட்ட வந்தனர். 
 
அதன் பின் பழைய நகராட்சி அலுவலகம் முன்பு உள்ள காந்தி சிலை முன்பு பேரணி நிறைவடைந்தது. இதன்பின் அண்ணல் காந்தியடிகளாரின் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
 
அதேபோல கர்மவீரர் காமராஜரின் புகைப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். அதன் பிறகு காந்தி சிலை முன்பு அமைக்கப்பட்டிருந்த பொதுக்கூட்ட மேடையில். நின்று கொண்டு காங்கிரஸ் வாழ்க காங்கிரஸ் வாழ்க என கோசமிட்டனர்.
 
அப்போது திருப்பூரில் அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தேசிய செயலாளரும் கர்நாடக மாநில பொறுப்பாளரும்  கோபிநாத் பழனியப்பன். நகரத் தலைவர் செந்தில்குமார் காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் முருகானந்தம் வட்டாரத் தலைவர் முத்துக்குமார் அசோக் ஹக்கீம் உள்ளிட்ட காங்கிரஸ் நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
 
அதன் பிறகு காங்கிரஸ் தேசிய செயலாளர்
சூரஜ் ஹெக்டே செய்தியாளர்களிடம் பேசியபோது:-
 
தாராபுரத்தில் நடைபெற்ற நல்லிணக்க நடைபயணம் என்பது காந்திய கொள்கை வழியில் காங்கிரஸ் கட்சியினர்.
அஹிம்சை, சத்யா, பிரம்மச்சாரியா, சுதேசி மற்றும் தீண்டாமையை நீக்குதல் போன்ற கொள்கைகளை கொண்ட கட்சி ஒரு கட்சி ஆட்சியில் இருக்கும் போது ஜாதி மதம் பேதம் மொழி இனம் பார்க்க கூடாது. அப்படி இருப்பவர்களே இந்தியர்கள் என காந்தியடிகள் கூறினார்கள்.
 
ஆனால் தற்போது இந்தியாவை ஆண்டு கொண்டிருக்கும் மத்திய பாஜக மோடி அரசாங்கம். மதம் மொழி ஜாதி ஆகியவற்றை முன்னெடுத்து செல்கிறது. 
 
இதை தவிர்க்க வேண்டுமானால் ஒரே இந்திய மக்களாக இருக்க வேண்டும்.ராகுல் காந்தி நாக்கை அறுத்தால் ரூ.11 லட்சம் பரிசு சிவசேனா ஷிண்டே அணி எம்எல்ஏ தெரிவித்ததும், இதுபோன்று பேசும் நபர்கள் மற்றும் கட்சி ஆகியவற்றை மக்கள் புறக்கணிக்க வேண்டும்.
ஹரியானா காஷ்மீர் ஆகிய தேர்தலில் காங்கிரஸ் நூறு சதவீதம் வெற்றி பெறும் அதே போல இனிவரும் மாநிலங்களில் காங்கிரஸ் அதிக இடங்களில் வெற்றி பெறும் எனவும். கர்நாடகா காங்கிரசுக்கு கிடைத்த முதல் வெற்றி அதைத் தொடர்ந்து காங்கிரசுக்கு வெற்றி கிடைத்து வருகிறது. குறிப்பாக திருப்பூர் தெற்கு மாவட்ட காங்கிரஸ் தெற்கு மாவட்ட தலைவர் தென்னரசு நல்லிணக்க நடை பயணத்தை சிறப்பாக செயல்படுத்தி இருக்கிறார் அவருக்கு காங்கிரஸ் கட்சியின் சார்பிலும் எனது சார்பிலும் அன்பும் நன்றியும் தெரிவித்துக் கொள்கிறேன் என்று தெரிவித்தார்.