வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sinoj
Last Updated : செவ்வாய், 5 மார்ச் 2024 (20:14 IST)

உதயநிதியை அடுத்து, ஆ.ராசாவின் பேச்சுக்கு பாஜகவினர் கண்டனம்

a raja
திமுக எம்பி., ஆ.ராசாவின் பேச்சுக்கு, பாஜக தொழில்நுட்ப பிரிவுத்தலைவர் அமித் மாளவியா உள்ளிட்ட பாஜகவினர் கண்டனம் தெரிவித்துவருகின்றனர்.

சமீபத்தில் அமைச்சர் உதய நிதி ஸ்டாலின் சனாதனம் பற்றி பேசியது தொடர்பான வழக்கில் உச்ச நீதிமன்ற நீதிபதிகள்,  அமைச்சராக இருந்துகொண்டு சொற்களில் கவனமாக இருக்க வேண்டும்! சொல்லும் கருத்துகளின் விளைவுகளை அறிந்திருக்க வேண்டும் என்று அறிவுறுத்தியிருந்தனர்.
 
இந்த நிலையில், திமுக எம்பி. ஆ.ராசா ஒரு பொதுக்கூட்டத்தில் பேசுகையில், இந்தியா ஒரு தேசமே அல்ல என்று பேசியதாகவும்,  நாங்கள் ராமருக்கு எதிரானவர்கள் என்று  கூறியதாகவும் பாஜக  நிர்வாகி அமித் மாளவியா கடும் கண்டனம் தெரிவித்திருக்கிறார்.
 
அவரது கருத்தை அடுத்து, பாஜக அமைச்சர்கள் மற்ற்ம் பாஜக  நிர்வாகிகளும் ஆ.ராசாவின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
 
இது அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
இதுகுறித்து பாஜக தொழில்நுட்ப பிரிவுத்தலைவர் அமித் மாளவியா தெரிவித்துள்ளதாவது:

''திமுகவின் வெறுப்பு பேச்சுகாள் அளவின்றி போய்ய்கொண்டுள்ளது. சனாதனம் பற்றி உதயநிதியின் பேச்சுக்குப் பிறகு தற்போது ஆ.ராசா கடவுள் ராமரை பற்றி அவதூறாக பேசியிருக்கிறார். இந்தியா  நாட்டையே கேள்விக்குள்ளாக்கி இருக்கிறார்'' என்று விமர்சித்துள்ளார்.