செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Updated : வெள்ளி, 26 மார்ச் 2021 (18:43 IST)

செங்கல்லை திருட்டிவிட்டார்..;உதயநிதி மீது பாஜக நிர்வாகி புகார்

மதுரை விளாத்திக்குளம் எய்ம்ஸ் மருத்துவமனை வளாகத்தில் இருந்து செங்கல்லை உதயநிதி திருடிவிட்டதாக பாஜக நிர்வாகி நீதிபாண்டியன் போலீஸுல் புகார் அளித்துள்ளார்.

மதுரை மாவட்டம் விளாத்திக்குளத்தில் தேர்தல் பிரச்சாரம் செய்த உதயநிதி,3 ஆண்டுகளுக்கு முன் பாஜகவும் அதிமுகவும் இணைந்து மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டிக்கொடுத்தார்கள்.நினைவிருக்கிறதா? நான் அதைக் கையோடு எடுத்துவந்துள்ளேன்….எனக் கூறி ஒரு செங்கல்லைக் காட்டினார்ல் இது இணையதளத்தில் வைரலானது.

மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுவதற்காக பிரதமர் மோடி அவர்களால் கடந்த 2019 ஆம் ஆண்டு அடிக்கல் நாட்டப்பட்டு 2020 ஆம் ஆண்டு பூமி பூஜை போடப்பட்டது. மருத்துவமனை அமையவுள்ள இடத்தில் தற்போது 5 கிமீட்டருக்கு மேல் சுற்றுச்சுவர் கட்டும்பணி நடைபெற்றுவருகிறது.

இந்நிலையில் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுவதற்காக வைக்கப்பட்டிருந்த செங்கல்லை உதயநிதி திருடிக் கொண்டு வந்து மக்களிடம் காண்பித்துள்ளதாகக் கூறி பாஜக நிர்வாகி நீதிப்பாண்டியன்  எனவே இந்திய தண்டனைச் சட்டம் 380ன் படி சட்டப்படி குற்றம்.அதனால்   உதயநிதியிடம் இருந்து செங்கல்லைப் பறிமுதல் செய்து அவர்மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் புகாரில் கூறியுள்ளார். இது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.