1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : புதன், 23 ஜூன் 2021 (16:01 IST)

கலைஞருக்கு பாரத ரத்னா விருது… திமுக சட்டமன்ற உறுப்பினர் கோரிக்கை!

தமிழக முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதிக்கு பாரத ரத்னா விருது வழங்க தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என திமுக சட்டமன்ற உறுப்பினர் இனிக்கோ இருதயராஜ் கோரிக்கை வைத்துள்ளார்.

இன்று சட்டமன்றத்தில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவித்து பேசிய திருச்சி கிழக்கு சட்டமன்ற உறுப்பினர் இனிக்கோ இருதயராஜ் ‘சிறுபான்மையினரின் நலன் காத்த முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதி அவர்களுக்கு பாரத ரத்னா விருது வழங்கவெனெடுமென்று தீர்மானம் இயற்றப்பட வேண்டும். மற்றும் திருச்சியை தமிழகத்தின் இரண்டாவது தலைநகராக அறிவிக்க வேண்டும்’ எனக் கோரிக்கை வைத்துள்ளார்.