செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Abimukatheesh
Last Updated : வியாழன், 26 அக்டோபர் 2017 (17:22 IST)

எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவுக்கு வைக்கப்பட்ட பேனர்களை அகற்ற நீதிமன்றம் உத்தரவு

திருச்சி எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவுக்கு வைக்கப்பட்ட பேனர்களை நாளை அகற்ற வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


 

 
கடந்த 24ஆம் தேதி உயிரோடு இருப்பவர்களின் புகைப்படங்களுடன் பேனர் மற்றும் கட் அவுட் வைக்க தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதற்கு சென்னை மாநகராட்சி சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. மேல்முறையீடு மனுவை விசாரித்த நீதிபதிகள் தனி நீதிபதி அளித்த தீர்ப்பில் தவறில்லை என கூறி மனு தள்ளுபடி செய்தனர்.
 
இந்நிலையில் திருச்சி எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவுக்கு வைக்கப்பட்ட பேனர்களை நாளை அகற்ற வேண்டும் என நீதிமன்றம் உத்த்ரவிட்டுள்ளது. 
 
அதோடு அதிகளவு பேனர்கள் வைக்கப்பட்டுள்ளதால் சட்டத்திற்கு உட்பட்டு பேனர்கள் வைக்கப்படவில்லை என தெரிகிறது என்று கூறிய நீதிமன்றம், பேனர்களை அகற்றிவிட்டு திங்கட்கிழமை அறிக்கை தாக்கல் செய்யவும் உத்தரவிட்டுள்ளது.