வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : ஞாயிறு, 7 ஆகஸ்ட் 2022 (21:24 IST)

ஆன்லைன் ரம்மி விளையாட்டு தடை செய்ய கருத்து கேட்கத் தேவையில்லை; வேல்முருகன்

rummy
ஆன்லைன் ரம்மி விளையாட்டு தடை விவகாரத்தில் மக்களிடம் கருத்து கேட்கத் தேவையில்லை என்றும், வலுவான சட்டத்தை இயற்றி அதனை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என்றும் தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் தெரிவித்துள்ளார்.
 
 ஆன்லைன் ரம்மி விளையாட்டை தடை செய்ய வேண்டும் என பெரும்பாலான மக்கள் கோரிக்கை விடுத்த நிலையில் ஆன்லைன் ரம்மி விளையாட தடை செய்ய வேண்டுமா என மக்களிடம் கருத்து கேட்க வேண்டும் என தமிழக அரசு என்று தெரிவித்திருந்தது
 
ஆன்லைன் விளையாட்டில் லட்சக்கணக்கில் பணத்தை இழந்த இளைஞர்களும் குடும்ப தலைவர்களும் தற்கொலை செய்து கொண்டிருக்கும் நிலையில் இதை தடை செய்ய மக்களிடம் எதற்காக கருத்து கேட்க வேண்டும் என்ற கேள்வி அனைவர் மனதிலும் எழுந்துள்ளது 
 
இந்த நிலையில் தமிழர் வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் இதுகுறித்து கூறிய போது ஆன்லைன் ரம்மி விளையாட தடை விவகாரத்தில் மக்களிடம் கருத்து கேட்க தேவையில்லை என்றும் வலுவான சட்டத்தை இயற்றி அதை உடனடியாக தடை செய்ய தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.