1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : செவ்வாய், 10 அக்டோபர் 2023 (07:18 IST)

குழந்தையை கடத்தியதால் கைதான பெண் மர்ம மரணம்.. என்ன நடந்தது?

குழந்தையை கடத்தியதால் கைதான பெண் ஒருவர் திடீரென மயங்கி விழுந்து மர்மமான முறையில் மரணம் அடைந்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
திருச்செந்தூர் முருகன் கோவிலில் ஒன்றரை வயது குழந்தையை திலகவதி என்பவர் தனது கணவருடன் சேர்ந்து கடத்தியதாக தெரிகிறது. இது குறித்து போலீசார் விசாரணை செய்து அவரை கைது செய்த நிலையில் கைதான சில மணி நேரத்தில் திலகவதி திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்தார்.  

குழந்தையை மீட்க திலகவதி மற்றும் அவரது கணவரை போலீசார் கைது செய்து காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றதாகவும் காவல் நிலையத்துக்கு சென்று கொண்டிருக்கும் போதே, திடீரென திலகவதி மயங்கி விழுந்ததாகவும் கூறப்படுகிறது

திலகவதியின் பிரேத பரிசோதனை அறிக்கைக்கு பின்னர் இதுகுறித்து விசாரணை செய்யப்படும் என்று போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.  கடத்தப்பட்ட குழந்தை தற்போது மீட்கப்பட்டுள்ளதாகவும் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட உள்ளதாகவும் கூறப்படுகிறது.

Edited by Siva