Daily Horoscope
✕

பள்ளி மாணவியை வழிமறித்து தாக்குதல்.! வாலிபர் சிறையில் அடைப்பு.!

Written By Senthil Velan
Updated: புதன், 24 ஜனவரி 2024 (13:30 IST)
திருத்தணி அருகே அரசு பள்ளி மாணவி மீது தாக்குதல் நடத்திய வாலிபரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
 
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி தாலுகா முத்துக்கொண்டாபுரம் கிராமத்தைச் சேர்ந்த மாணவி, கனகம்மாசத்திரம் அரசு உயர்நிலைப் பள்ளியில்  11ஆம் வகுப்பு படித்து வருகிறார்.
 
இந்த நிலையில் பள்ளி முடிந்து மாணவி வீட்டுக்கு திரும்பி கொண்டிருந்த போது, அதே கிராமத்தைச் சேர்ந்த விஜய் என்ற வாலிபர், சைக்கிளில் வந்த மாணவியை கீழே தள்ளி படுகாயம் ஏற்படுத்தி உள்ளார்.

ALSO READ: காங்கிரசை கழட்டிவிட்ட மம்தா.! மேற்கு வங்கத்தில் தனித்துப் போட்டி.! இந்தியா கூட்டணிக்கு பின்னடைவு.!
 
இதுகுறித்து அந்த மாணவி தந்தையிடம் தெரிவித்த நிலையில் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அதன் பேரில் வழக்கு பதிவு செய்த திருத்தணி போலீசார், மாணவியிடம் தகராறில் ஈடுபட்ட விஜயை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி பின்னர் சிறையில் அடைத்தனர்.

எல்லாம் காட்டு

18 - 20 சதவீதம் குறைந்த மொபைல் விற்பனை!.. தீபாவளி ஆஃபரும் கை கொடுக்கலயே!...

வாய் மட்டும் வேலை செஞ்சி யூஸ் இல்ல.. பன்ச் டயலாக் மட்டும்தான்... விஜயை விளாசிய ஸ்டாலின்...

கமலுக்கு ஒரு வாரம்தான் டைம்!.. சண்டியர் தலைப்பை மாத்தணும்.. கிருஷ்ணசாமி கெடு...

கோல்ட் பிளாக் சிகரெட் விலை உயர்வு!.. ITC நிறுவனம் அதிரடி முடிவு...

மோடியை கேள்வி கேட்ட நார்வே பத்திரிகையாளருக்கு விசா மறுப்பு.. கடைசி நிமிடத்தில் பரபரப்பு..

அடுத்த கட்டுரையில்
Show comments