புதன், 4 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By c.anandakumar
Last Updated : புதன், 20 மார்ச் 2019 (20:50 IST)

செண்டிமெண்ட் பிரகாரம் அ.தி.மு.க மக்களவை தேர்தல் கரூரில் துவக்கம்

நடைபெற இருக்கின்ற 17 வது பாராளுமன்ற தேர்தலில் நாடு முழுவதும் தீவிர பிரச்சாரங்கள் தேசிய கட்சிகள் மாநில கட்சிகளுடன் இணைந்து பிரச்சாரங்கள் செய்து தீவிர பிரச்சாரங்கள் செய்து வருகின்றனர்.
கரூர் பாராளுமன்ற தொகுதியின் அ.தி.மு.க வேட்பாளரும், தற்போதைய சிட்டிங் எம்.பி யுமான தம்பித்துரை அறிவிக்கப்பட்ட நாளில் இருந்து இன்று வரை கட்சி நிர்வாகிகளை சந்தித்த பின்னர் கூட்டணி கட்சி நிர்வாகிகளை சந்தித்து இன்று காலை பணிமனை அலுவலகத்தினை திறந்து வைத்ததோடு, கூட்டணி கட்சி நிர்வாகிகளுடன் செண்டிமெண்ட் கோயிலாகவும் எப்போதும், தேர்தல் என்றாலே, கரூர் அடுத்த கோடங்கிபட்டி பட்டாளம்மன் மற்றும் முத்தாலம்மன் ஆலயத்தில் இருந்து தான் எம்.ஜி.ஆர் காலத்தில் இருந்தே தேர்தல் பிரச்சாரத்தினை துவக்கும் நிலையில், இன்று நாடாளுமன்ற தேர்தலில் அதே பாணியில் இதே கரூர் தொகுதியில் ஆறாவது முறையாக கரூர் எம்.பி தேர்தலில் சுவாமி வழிபாடு செய்து பிரச்சாரத்தினை துவக்கினர். 
 
பா.ம.க மாநில துணை பொதுச்செயலாளர் பி.எம்.கே.பாஸ்கரன், பா.ம.க முன்னாள் எம்.எல்.ஏ மலையப்பசாமி, பா.ஜ.க மாவட்டத்தலைவர் முருகானந்தம், தேசிய முற்போக்கு திராவிட கழக மாவட்டத்தலைவர் தங்கவேல் உள்ளிட்ட கூட்டணி கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டு சுவாமி வழிபாடு நடத்தினார்கள்.
 
பின்னர் பிரச்சார வாகன சாவியினை பூஜை தட்டில் வைத்தும், துண்டு பிரசூரங்களை வைத்தும் வழிபாடு நடத்தி பூஜை செய்து பின்னர் வீதி, வீதியாக பிரச்சாரங்களை மேற்கொண்டனர். 
 
பின்னர் பிரச்சாரத்தினை மேற்கொண்ட தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், வேட்பாளர் தம்பித்துரைக்கு இரட்டை இலை சின்னத்தில் வாக்குகள் சேகரித்தார். அதன்பின்னர் பொதுமக்களிடம் ஆரத்திகளை பெற்று வேட்பாளர் தம்பித்துரையும் வாக்குகள் சேகரித்தார்.

அப்போது என்னை பலமுறை எம்.பி ஆக்கிய மக்கள் இந்த மக்கள் இந்த முறையும் பல லட்ச வாக்குகள் வித்யாசத்தில் வெற்றி பெற வைப்பார்கள் எனக்கு இருக்கின்றது என்று கூறியதோடு, அம்மாவின் சின்னம் இரட்டை இலை சின்னம், எம்.ஜி.ஆரின் சின்னம் இரட்டை இலை சின்னம் என்றார்.