1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: திங்கள், 27 டிசம்பர் 2021 (17:57 IST)

அருள்வாக்கு அன்னபூரணியின் வங்கிக்கணக்குகள் முடக்கமா?

அருள்வாக்கு அன்னபூரணியின் வங்கி கணக்குகள் முடக்கப்பட்டன ஆக கூறப்பட்டிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
சொல்வதெல்லாம் உண்மை என்ற நிகழ்ச்சியில் கள்ளக்காதலில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டிருந்த அன்னபூரணி திடீரென தன்னைத்தானே ஆதி பராசக்தியின் அவதாரம் என்று கூறிக் கொண்டு பக்தர்களுக்கு அருள்வாக்கு கூறி வருகிறார் 
 
இந்த நிலையில் காவல் துறையின் அனுமதியின்றி அருள்வாக்கு கூறும் கூட்டத்தை கூட்டியதாக அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
இதனை அடுத்து அவர் தலைமறைவாக இருப்பதாகவும் தெரிகிறது. இந்த நிலையில் தற்போது கசிந்துள்ள தகவலின்படி அருள்வாக்கு அன்னபூரணியின் வங்கி கணக்குகள் முடக்கப்பட்டன  என கூறப்பட்டு இருப்பதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது