வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : வெள்ளி, 9 அக்டோபர் 2020 (17:27 IST)

பேரறிவாளனை நிரந்தரமாக விடுதலை செய்யவேண்டும் -அற்புதம் அம்மாள் கோரிக்கை!

பரோலில் விடுதலையாகியுள்ள பேரறிவாளனை நிரந்தரமாக விடுதலை செய்யவேண்டும் என அற்புதம் அம்மாள் கோரிக்கை வைத்துள்ளார்.

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிக்கி கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக ஏழு தமிழர்கள் சிறையில் தண்டனை அனுபவித்து வருகின்றனர் என்பது தெரிந்ததே. ஏழு தமிழர்களையும் விடுதலை செய்ய வேண்டும் என்று தமிழக அமைச்சரவை தீர்மானம் இயற்றியும் இன்னும் அவர்கள் விடுதலையாகவில்லை

இந்த நிலையில் சிறையில் இருக்கு எழுவரில் ஒரு சிலர் அவ்வப்போது பரோலில் வெளிவந்து மீண்டும் சிறைக்கு சென்றுள்ளனர். இந்த நிலையில் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள பேரறிவாளனுக்கு 30 நாள் பரோல் வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது  இந்நிலையில் சிறுநீர் தொற்றுக்காக சிகிச்சைப் பெற்று வரும் பேரறுவாளனை நிரந்தரமாக விடுதலை செய்யவேண்டும் என அவரின் தாயார் அற்புதம் அம்மாள் கோரிக்கை வைத்துள்ளார்.